உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாவட்ட பால்பேட்மின்டன் கத்திவாக்கம் அரசு பள்ளி தேர்வு

மாவட்ட பால்பேட்மின்டன் கத்திவாக்கம் அரசு பள்ளி தேர்வு

எண்ணுார்,சென்னை, பள்ளிக் கல்வித்துறை சார்பில், திருவொற்றியூர் குறுவட்ட அளவிலான பால்பேட்மின்டன் போட்டிகள், ஜூலை 31ல், எண்ணுார், கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தன. இதில், ஆறு பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதன்படி, 14, 17, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி; 14, 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் என, கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, ஐந்து அணிகள், வெற்றி பெற்று முதலிடம் பிடித்தன. இதன் வாயிலாக, இந்த ஐந்து அணிகளும், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளன. அபாரமாக விளையாடிய பள்ளியைச் சேர்ந்த மாணவ - மாணவியரை, தலைமை ஆசிரியை அனிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை