மேலும் செய்திகள்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,'
06-Jul-2025
திருத்தணி:திருத்தணியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம், 27 ஊராட்சிகளில், 250க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் நெல், வேர்கடலை, கரும்பு, காய்கறி மற்றும் சவுக்கு போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள், 1,552 ஏக்கர் நிலப்பரப்பில் நெல்பயிர் செய்துள்ளனர். தற்போது, நெல் அறுவடையை விவசாயிகள் செய்து வருகின்றனர்.நெல்லை விற்பனை செய்வதற்கு திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையம் முன் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளனர். மேலும் நெல்லை களத்தில் குவித்துள்ளனர். ஆனால் நெல்கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் நெல் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகிறது. எனவே, விவசாயிகள் நலன் கருதி, நெல் கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளிடம் இருந்து அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
06-Jul-2025