உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

ஆரணி:ஆரணி அடுத்த எருக்குவாய் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. நேற்று பகல் நேரத்தில், அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் ஒருவர், அங்கிருந்த எருக்குவாய், சேர்பேடு, மணலி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட, பசலி 1434 அடங்கல் புத்தகங்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் அளித்த புகாரின்படி, ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி