மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டுனர் நல வாரிய உறுப்பினராக இன்று முகாம்
10-Jan-2025
திருவள்ளூர்:தமிழ்நாடு வீட்டு பணியாளர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம், நாளை மறுநாள் துவங்குகிறது.பொன்னேரி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடாசலபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உட்பட, 18 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது.நல வாரியங்களில் உறுப்பினராக சேர, https://tnuwwb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.இதில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், வீட்டு பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர, https://tnuwwb.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இந்த வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தோருக்கு, இரண்டு குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.இதற்காக, பொன்னேரி, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், வரும் 3 - 5ம் தேதி வரை, மூன்று நாட்கள் சிறப்பு முகாம், காலை 10:00 - மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது.ஆதார், ரேஷன் கார்டு, பிறந்த தேதி ஆவணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வரலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2797 2221, 2957 0497 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-Jan-2025