உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி - புழல் கால்வாய் ஓரம் குப்பை கொட்டுவதால் குடிநீர் மாசு

பூண்டி - புழல் கால்வாய் ஓரம் குப்பை கொட்டுவதால் குடிநீர் மாசு

திருவள்ளூர் : சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா நீர், கொசஸ்தலை ஆறு நீர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருகிறது.இங்கு சேகரமாகும் தண்ணீரை புழல் ஏரிக்கு கால்வாய் வாயிலாக கொண்டு செல்லப்பட்டு, பின், சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.இந்த நிலையில், பூண்டி - புழல் கால்வாய் வழியில் ஈக்காடு கிராமம் அமைந்துள்ளது. கால்வாய்யோரம் வசித்து வரும் கிராமவாசிகள், தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை, திருவள்ளூர் - செங்குன்றம் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகில் உள்ள, பகுதியில் கொட்டி வருகின்றனர்.அருகில் உள்ள கடைக்காரர்கள், கோழி இறைச்சி கழிவுகளையும் இந்த கால்வாய் அருகில் குவித்துள்ளனர். எனவே, குப்பை கொட்டி வருவதை தடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ