உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 100 கிலோ கஞ்சா பறிமுதல் ஓட்டுநர், கிளீனர் சிக்கினர்

100 கிலோ கஞ்சா பறிமுதல் ஓட்டுநர், கிளீனர் சிக்கினர்

கும்மிடிப்பூண்டி, ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தப்பட்ட, 100 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை கைது செய்தனர். ஒடிஷாவில் இருந்து ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு, லாரி மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, இரும்பு 'ஷீட்'டுகள் ஏற்றி வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மறைத்து வைத்திருந்த 100 கிலோ எடை கொண்ட, 50 கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. லாரியுடன், கஞ்சா பொட்டலங் களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து, லாரி ஓட்டுநரான, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், 40, கிளீனர் தனசேகர், 38, ஆகிய இருவரை கைது செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை