மேலும் செய்திகள்
'ஸ்டேட்டஸ்' சில் கத்தி வைத்தவர் கைது
26-Aug-2024
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பகுதியில், எறும்புத்தின்னி கடத்தி விற்க முயற்சி செய்வதாக பள்ளிப்பட்டு வனசரக அலுவலர்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனசரகர் சங்கர் தலைமையிலான வனத்துறையினர், அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.அந்த ஆட்டோவில் ஒரு பையில் எறும்பு தின்னி இருப்பதை கண்டனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், 53, சர்புதீன், 39, ஆனந்தராஜ், 31, மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத், 58, சேல பத்திர ரெட்டி, 58, மனோஜ், 24, ஜெகதீஷ்,30, முனிராஜரெட்டி, 58, ஆகியோர் கடத்தி வந்தது தெரிய வந்தது.எட்டு பேரையும் கைது செய்த வனத்துறை அதிகாரிகள் பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர் செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
26-Aug-2024