முதியவர் உடல் மீட்பு
திருவாலங்காடு:திருவாலங்காடில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பராசக்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வந்தார்.இவர் நேற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்த போது வளாகத்தின் ஒதுக்குபுறமாக சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கம் ஏற்பட்டு பழைய சித்த மருத்துவமனை கட்டடம் அருகே இறந்து கிடந்தார்.தகவல் அறிந்த திருவாலங்காடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.