உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி அயத்துாரில் மக்கள் போராட்டம்

பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி அயத்துாரில் மக்கள் போராட்டம்

திருவள்ளூர், தேசிய நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உயிரிழந்தார். இது தொடர்பாக பகுதிமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் அடுத்த அயத்துார் அருகே உள்ள புஜ்ஜன்கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 70; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு 'பேஷன் புரோ' பைக்கில், அயத்துார் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார்.திருவிழா முடிந்து வீடு திரும்பாததால், உறவினர்கள் இரவு முழுதும் அவரை தேடினர். நேற்று காலை 7:00 மணியளவில் அயத்துார் பகுதியில், எண்ணுார் துறைமுகத்தில் துவங்கி, மாமல்லபுரத்தில் முடியும் வகையில் நடந்து வரும் நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பைக்குடன் கிருஷ்ணன் விழுந்து, இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், பள்ளம் தோண்டிய நெடுஞ்சாலைத் துறையை கண்டித்தும், உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த செவ்வாப்பேட்டை மற்றும் பூந்தமல்லி போலீசார், உறவினர்களிடம் பேச்சு நடத்தினர். அதன்பின், அவர்கள் கலைந்து சென்றனர். பின், சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை