உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வன்கொடுமை தடுப்பு குழுவிற்கு அலுவல் சாரா உறுப்பினர் தேர்வு

வன்கொடுமை தடுப்பு குழுவிற்கு அலுவல் சாரா உறுப்பினர் தேர்வு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு, அலுவல் சாரா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் 2025 -- 27ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இக்குவில் சேர விரும்பும் சமூக ஆர்வலர்கள், துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தங்களது சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், வரும் 16ம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் வாயிலாகவோ அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை