உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூர் ரயில் நிலையத்தில் விரைவில் மின்துாக்கி வசதி

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் விரைவில் மின்துாக்கி வசதி

மீஞ்சூர்:முதியோர், மாற்றுத்திறனாளிகள் நடைமேடைகளுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக, மீஞ்சூர் ரயில் நிலையத்தில் மின்துாக்கி வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள ரயில் நிலையங்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியர், நோயாளிகள் உள்ளிட்டோரின் வசதிக்காக, நடைமேடைகளில் மின்துாக்கி வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எண்ணுார், மீஞ்சூர், ஆவடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் புதிதாக 60 மின்துாக்கிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு, புறநகர் மின்சார ரயில்களில் ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வருகின்றனர். இவர்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர், அங்குள்ள படிக்கட்டுகளில் ஏறி, நடைமேடைகளை கடக்க சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், முதல் மற்றும் இரண்டாவது நடைமேடைகளில் மின்துாக்கி வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி