உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்மோட்டார், குழாய் சேதம் குடிநீர் கிடைக்காமல் அவதி

மின்மோட்டார், குழாய் சேதம் குடிநீர் கிடைக்காமல் அவதி

கண்ணுார்:கண்ணுார் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் மற்றும் குழாய் சேதமடைந்துள்ளதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கண்ணுார் ஊராட்சி. இப்பகுதியில், அரைவாக்கம் மற்றும் காலனி பகுதியில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை.மேலும், சில இடங்களில் குழாய்களும் சேதமடைந்துள்ளன. இதனால், குடியிருப்புவாசிகள் நான்கு நாட்களாக குடிநீருக்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், காலி குடங்களுடன் இருசக்கர வாகனங்களில் நீர்த்தேக்க தொட்டி உள்ள பகுதிகளுக்கு சென்று, குடிநீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஊராட்சியில் போதிய நிதி இல்லாததால், மின்மோட்டார் மற்றும் சேதமடைந்த குழாய்களை சீரமைக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்மோட்டார் மற்றும் பழுதடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என, கண்ணுார் ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை