புகார் பெட்டி திறந்த நிலையில் மின்சாதனப் பெட்டி
பொன்னேரி அடுத்த, ஆண்டார்குப்பம், பாலசுப்ரமணி சுவாமி கோவிலின், வாகன நிறுத்துமிடம் அருகே, தெருவிளக்குகள் இயக்கும் மின்சாதனப் பெட்டி, திறந்த நிலையில் உள்ளது.தரைப்பகுதியில் இது அமைக்கப்பட்டிருப்பதால், சிறுவர்கள் அதில் கைவைத்து விளையாட வாய்ப்பு உள்ளது. திறந்த நிலையில் இருப்பதால், வாகன நிறுத்துமிடத்திற்கு செல்லும் வாகனங்கள் அதில் உரசி மின்விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.- ஆர்.ஜி.கிருஷ்ணா,பொன்னேரி.திருத்தணி- - சென்னை இடையேகூடுதல் பேருந்துகள் தேவைதிருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை 4:30 - காலை 6:30 மணி வரை, நான்கு அரசு பேருந்துகள் மட்டுமே நேரடி சர்வீஸ் இயக்கப்படுகின்றன.அதன்பின், திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னைக்கு செல்ல நேரடி பேருந்து இல்லாததால் திருத்தணி பைபாஸ் சாலை வழியே திருப்பதி-- - சென்னை இடையே இயக்கப்படும், தடம் எண்: 201 என்ற பேருந்தில் தான் செல்ல வேண்டிய நிலையுள்ளது.இந்த பேருந்துகளும், அரை மணி நேரத்திற்கு மேல் ஒன்று என இயக்கப்படுகின்றன. இதனால், திருத்தணியில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டியவர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக நேரடி பேருந்துகள் கூடுதலாக இயக்க வேண்டுகிறேன்.-- க.வினாயகம், திருத்தணி.சாலையில் நிறுத்தும்வாகனங்களால் நெரிசல்சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், ஊத்துக்கோட்டை பஜார் பகுதி வழியே செல்கின்றன. ஏற்கனவே வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்.- என்.ராஜேந்திரபிரசாத்,ஊத்துக்கோட்டை.