உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மின் கணக்கீடு மாதம் மாற்றம்

 மின் கணக்கீடு மாதம் மாற்றம்

திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை மின் வாரியத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில், மின் கணக்கீடு எடுக்கும் மாதம், மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. திருமழிசை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செவ்வாப்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட தண்ணீர்குளம், ராமபுரம் - பிருந்தாவன் நகர், முத்தமிழ் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், இம்மாதம் முதல் நிர்வாக மாறு தலுக்காக, ஒற்றை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட உள்ளது. இதன்படி, ஜன., மார்ச், மே, ஜூலை, செப்., நவம்பர் ஆகிய மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படும். இந்த மாற்றம் காரணமாக, இம்மாதம் மீண்டும் மின் கணக்கீடு செய்யப்படும். எனவே, மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர், இம்மாதமும் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ