உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருத்தணியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் திருத்தணி வருவாய் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை, காலை 11:00 மணிக்கு நடக்கிறது.இதில், திருவள்ளூர் மின்பகிர்மான மேற்பார்வையாளர், திருத்தணி கோட்ட செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் பங்கேற்கின்றனர்.ஆகையால், வருவாய் கோட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மின்சாரம் தொடர்பாக பிரச்சனைகள் மற்றும் தங்களது குறைகளை புகார் நேரில் தெரிவிக்கலாம்.மேலும், கோரிக்கைகள் மனுவாகவும் கொடுக்கலாம்.இங்கு கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் பங்கேற்று பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.மேற்கண்ட தகவலை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை