உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி மோதி பொறியாளர் பலி

லாரி மோதி பொறியாளர் பலி

சென்னை: மேடவாக்கம் நீலா நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 35; மென்பொறியாளர். இவர் அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.நேற்று அதிகாலை பணி முடிந்து, தன் பைக்கில் வீடு திரும்பினார். அசோக் நகர் 100 அடி சாலையில் சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி, இவரது பைக் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட வேல்முருகன், உயிரிழந்தார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை