காற்று, ஒலி மாசற்ற தீபாவளி சுற்றுச்சூழல் துறை பிரசாரம்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் சார்பில், காற்று, ஒலி மாசற்ற தீபாவளியை வலியுறுத்தி, நேற்று ஆட்டோ பிரசாரம் மே ற்கொள்ளப்பட்டது. கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் சார்பில், காற்று, ஒலி மாசு மற்றும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த ஆட்டோ பிரசாரம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஒலி பெருக்கி மற்றும் துண்டு பிரசுரம் மூலம், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று ஆட்டோ பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. காலை 6:00 - 7:00 மணி மற்றும் இரவு 7:00 - 8:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.