உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடு மீன் இறங்குதள வளாகம் ரூ.7 கோடியில் விரிவாக்க பணி வேகம்

பழவேற்காடு மீன் இறங்குதள வளாகம் ரூ.7 கோடியில் விரிவாக்க பணி வேகம்

பழவேற்காடு:பழவேற்காடு மீன் இறங்குதள வளாகம், 7 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்வதற்கான கட்டுமான பணி, வேகமாக நடந்து வருகிறது. பழவேற்காடு பகுதியில், 35 மீனவ கிராமங்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. மீனவர்கள் படகுகளை நிறுத்தவும், மீன்களை இறக்கி விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லவும் வசதியாக, 15 ஆண்டுகளுக்கு முன் பழவேற்காடு ஏரியின் கரையில், மீன் இறங்குதள வளாகம் அமைக்கப்பட்டது. இங்கு, மீன் ஏலக்கூடம், விற்பனை கூடம், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வணிக வளாகமும் கட்டப்பட்டன. மீனவர்களின் பயன்பாடு அதிகரித்து, நெரிசல் ஏற்படுவதால், தற்போது இறங்குதள வளாகம், 7 கோடி ரூபாயில் விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு, 6,500 சதுர அடியில் விற்பனை கூடம், கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கான இறங்குதளம், மீன் வெட்டும் கூடம், கூட்டரங்கம் உள்ளிட்டவற்றின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விரிவாக்க திட்டத்தால், மீனவர்களுக்கு கூடுதல் இடவசதி கிடைப்பதுடன், மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பணிகளை முடித்து, ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை