உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து குடிநீர் வழங்க எதிர்பார்ப்பு

சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து குடிநீர் வழங்க எதிர்பார்ப்பு

திருவாலங்காடு:திருவாலங்காடு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாலங்காடு ஊராட்சியில் பராசக்தி நகர், பவானி நகர், சன்னிதி தெரு, பெரிய தெரு, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில், 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக வினியோகிக்கப்படும் நிலத்தடி நீரையே பயன்படுத்தி வருகின்றனர்.சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மாசுபட்டு இருப்பதால், தண்ணீரை குடிக்க முடியாமல் பலரும் சிரமப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், நீரில் உப்பின் அளவு அதிகரித்து இருப்பதால், சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக பகுதிவாசிகள் கூறுகின்றனர்.எனவே, தங்கள் பகுதியில் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து குடிநீர் வினியோகிக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை