உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சேதமடைந்த பேரிகார்டு மாற்றியமைக்க எதிர்பார்ப்பு

 சேதமடைந்த பேரிகார்டு மாற்றியமைக்க எதிர்பார்ப்பு

திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த பேரிகார்டை மாற்றியமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர். சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் வழியாக தினமும் 20,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. கனகம்மாசத்திரம் நான்குமுனை சந்திப்பில், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க, கனகம்மாசத்திரம் போலீசாரால் பேரிகார்டு வைக்கப்பட்டு உள்ளது. இந்த பேரிகார்டு சில நாட்களாக சேதமடைந்து, அதிலுள்ள தகடு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக, வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே, உடனே சேதமடைந்த பேரிகார்டை மாற்றிவிட்டு, புதிதாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை