உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பழுது 2 மணி நேரம் பயணியர் தவிப்பு

எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பழுது 2 மணி நேரம் பயணியர் தவிப்பு

திருவள்ளூர்: 'லால்பாக் எக்ஸ்பிரஸ்' ரயில் இன்ஜின் பழுதாகி, திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டதால், பயணியர் அவதியடைந்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரில் நேற்று காலை 6:25 மணிக்கு புறப்பட்ட 'லால்பாக் எக்ஸ்பிரஸ்' ரயில், சென்னை சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அரக்கோணம் அடுத்த, மோசூர் - திருவாலங்காடு ரயில் நிலையம் இடையே, 10:55 மணிக்கு ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மெதுவாக இயக்கப்பட்டு, திருவாலங்காடு பணிமனை சிக்னலில், ரயில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ரயில் ஓட்டுநர், அரக்கோணம் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற ஊழியர்கள், ரயிலில் மாற்று இன்ஜினை பொருத்தினர். பின், மதியம் 12:55 மணிக்கு ரயில் புறப்பட்டது. இரண்டு மணி நேரம் ரயில் இயக்கம் தடைபட்டதால், ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டனர். சிலர், மாற்று ரயிலில் செல்ல தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ