உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை உரிமையாளர் பலி

பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை உரிமையாளர் பலி

திருவள்ளூர், திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி, தொழிற்சாலை உரிமையாளர் உயிரிழந்தார். ஆவடி கோவில்பதாகை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் ராஜ், 44. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். அம்பத்துார் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். கடந்த, 30ம் தேதி இரவு அரக்கோணம் சென்று விட்டு திருவள்ளூர் வழியாக, பல்சர் இருசக்கர வாகனத்தில் ஆவடி வந்து கொண்டிருந்தார். திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலையில் நாராயணபுரம் கூட்டு சாலை பகுதியில் வந்தபோது, திருத்தணி நோக்கி வந்த மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த லாரி மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சாமுவேல்ராஜ் உயிரிழந்தார். தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை