உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்வளத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்ட விவசாயி

நீர்வளத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்ட விவசாயி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஏரி மதகை சீரமைக்க தவறியதால், விவசாயி ஒருவர் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கவரைப்பேட்டை அடுத்த கீழ்முதலம்பேடு கிராமத்தில், நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள ஏரியின் மதகு ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. அதை சீரமைக்க வலியுறுத்தி, கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சார்பில் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. செவி சாய்க்காத நீர்வளத்துறையின் அலட்சிய போக்கை கண்டிக்கும் விதமாக, கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி அய்யாசாமி, 50, என்பவர் நேற்று காலை கவரைப்பேட்டையில், பூட்டியிருந்த நீர்வளத்துறை அலுவலகத்திற்கு மேலும் ஒரு பூட்டு போட்டு பூட்டியுள்ளார். தொடர்ந்து நீர்வளத்துறை உதவி பொறியாளர் கண்ணனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்ணன் அளித்த புகாரையடுத்து கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை