மேலும் செய்திகள்
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
10-Sep-2025
400 மின்கம்பங்கள் பழுது விரைவில் மாற்ற முடிவு
12-Sep-2025
திருத்தணி:விவசாய கிணறுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்வதை தடுப்பதற்கு, கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் மனு அளித்தனர். திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகித்தார். திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பொறுப்பு முருகபூபதி வரவேற்றார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருத்தணி ஒன்றிய தலைவர் லிங்கமூர்த்தி மற்றும் விவசாயிகள் மேற்பார்வை பொறியாளரிடம் வழங்கிய மனுவில், வி.கே.என்.கண்டிகை, டி.சி. கண்டிகை ஆகிய பகுதிகளில் விவசாய கிணறுகளுக்கு மிக குறைந்த அழுத்த மின்சாரம் வழங்குவதால், மின்மோட்டார்கள் இயக்க முடியவில்லை. சீரான மின்சாரம் வழங்குவதற்கு கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும்' என தெரிவித்தனர்.
10-Sep-2025
12-Sep-2025