உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பயிர் காப்பீடு திட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

 பயிர் காப்பீடு திட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

பொன்னேரி: பயிர் காப்பீடு பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்பதால், கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா' நிறுவனத்தின் மூலம், 1 ஏக்கருக்கு, 545 ரூபாய் செலுத்தி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. அதற்கான கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் இணைவதற்கு, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து, அடங்கல், கணினி சிட்டா உள்ளிட்ட விபரங்களுடன், இ - சேவை மையங்கள் மூலம் காப்பீடு பெற வேண்டும். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிர வாக்காளர் திருத்த பணியில் ஈடுபட்டிருப்பதால், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட விவரங்களை உரிய நேரத்தில் பெற முடியாமல் தவிக்கின்றனர். பயிர் காப்பீட்டிற்கான காலஅவகாசம் இன்றுடன் முடியவுள்ள நிலையில், அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் இணைய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே, பயிர் காப்பீடு பெறுவதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை