உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தம் விவசாயிகள், கிராமவாசிகள் தவிப்பு

கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தம் விவசாயிகள், கிராமவாசிகள் தவிப்பு

பொன்னேரி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இதனால் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் உள்ள, 31 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் அவற்றின் கீழ் செயல்படும், 379 நியாய விலைக்கடைகளும் பூட்டிக்கிடக்கின்றன.தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் பயிர்கடன், உரம், யூரியா உள்ளிட்ட விவசாய இடுபொருட்கள் ஆகியவற்றை பெற முடியாமல் தவிக்கின்றனர்.நகைக்கடன் பெறவும், சுயஉதவிக்குழுக்கள் கடன் பெறவும் கிராமவாசிகள் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களுக்கு வந்து, பூட்டி கிடப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.தீபாவளி நெருங்கும் நிலையில், நியாய விலைக்கடைகளில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் கிராமவாசிகளும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.விவசாயிகள் மற்றும் கிராமவாசிகள் கூறியதாவது:தற்போது மழை பெய்து உள்ளதால் அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான மருந்தினங்களை பயிர்களுக்கு உடனடியாக தெளிக்க வேண்டும். அவற்றை வாங்குவதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களுக்கு வந்தால் பூட்டி கிடக்கிறது. வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. நகைக்கடனுக்கு தனியார் அடகு கடைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ