உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கே.ஜி.கண்டிகை நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு

கே.ஜி.கண்டிகை நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு

திருத்தணி:திருத்தணி தாலுகாவில் திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் வேலஞ்சேரி மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில், அரசு சார்பில் மூன்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது.இந்நிலையில், கே.ஜி.கண்டிகை கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் டிராக்டர், ஆட்டோக்கள் வாயிலாக கொண்டு வரும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் வாங்காமல், இரண்டு - மூன்று நாட்கள் வரை காத்திருக்க வைக்கின்றனர்.இதனால், வாகனத்திற்கு கூடுதல் வாடகை மற்றும் அங்கேயே தங்க வேண்டிய அவலநிலை உள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறையால், நெல் மூட்டைகளை சுத்தம் செய்து, எடை போடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.நெல் மூட்டைகள் உடனே இறக்க முடியாமல், சில நாட்களாக காத்திருப்பதால், விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி