உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செருக்கனுார் ஏரிக்கரை சாலையில் எரியாத மின்விளக்குகளால் அச்சம்

செருக்கனுார் ஏரிக்கரை சாலையில் எரியாத மின்விளக்குகளால் அச்சம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் செருக்கனுார் சித்தேரியில் உள்ள ஏரிக்கரை தார்ச்சாலை வழியாக, செருக்கனுார் காலனி, ராமகிருஷ்ணாபுரம், சாமந்திபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கே.ஜி.கண்டிகை மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் வசதிக்காக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏரிக்கரை சாலையோரம், 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஏற்படுத்தி, மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இச்சாலை வழியாக, அதிகாலை 3:00 - நள்ளிரவு 11:30 மணி வரை மக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர். ஒரு மாதமாக ஏரிக்கரையின் மீதுள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் ஒளிராமல் உள்ளன.இதற்கு காரணம், மின்கம்பங்கள் இடையே முட்செடிகள் வளர்ந்துள்ளதால், மின் கம்பிகள் காற்று அடிக்கும் போது ஒன்றோடு ஒன்று உரசுவதால், அடிக்கடி மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் கிராம மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் தடுமாற்றம் அடைகின்றனர். எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரிக்கரை சாலையில் மீண்டும் மின்விளக்குகள் ஒளிர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை