உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மொட்டை மாடியில் இருந்து குதித்து பெண் மருத்துவர் தற்கொலை

மொட்டை மாடியில் இருந்து குதித்து பெண் மருத்துவர் தற்கொலை

பெருங்களத்துார்:பெருங்களத்துாரில், 12 மாடிகள் கொண்ட குடியிருப்பு மொட்டை மாடியில் இருந்து குதித்து, பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர் ஜோதீஸ்வரி, 30. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மீனம்பாக்கத்தில் உள்ள சி.ஜி.எச்., மத்திய அரசு மருத்துவமனையில், மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், ராமநாதபுரத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியரான யுதீஸ்வரன், 34, என்பவருக்கும், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்மொருள் நிறுவனத்தில், யுதீஸ்வரன் பணிபுரிந்து வருகிறார். திருமணம் முடிந்து, தம்பதி இருவரும் மூன்று மாதங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்த யுதீஸ்வரன், சொந்த ஊருக்கே சென்று, வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதாகவும், அவ்வப்போது மனைவியை பார்க்க சென்னை வந்து சென்றதாகவும் தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், பெருங்களத்துார், ஸ்ரீராம் கேட்டில், 12 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சகோதரி முத்துலட்சுமி வீட்டிற்கு ஜோதீஸ்வரி சென்றார். சகோதரி வீட்டில் இருந்து, மாலையில் கோடம்பாக்கத்திற்கு புறப்பட்டார். குடியிருப்பு 'லிப்டிற்'குள் சென்ற ஜோதீஸ்வரி, கீழே செல்லாமல், மேலே சென்றார். மொட்டை மாடியில் செருப்பு, கைப்பையை கழற்றி வைத்துவிட்டு, கீழே குதித்தார். இதில், உடல் சிதைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார். ஜோதீஸ்வரியின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை