உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூவம் ஆற்றங்கரையில் கழிவுநீர் குப்பை கொட்டினால் அபராதம்

கூவம் ஆற்றங்கரையில் கழிவுநீர் குப்பை கொட்டினால் அபராதம்

திருவள்ளூர்:

கூவம் ஆற்று கரையில் கழிவுநீர், குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் கீழ், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சென்னீர்குப்பம் ஊராட்சி.வில்லிவாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த அடையாளம்பட்டு, வானகரம் ஊராட்சிகளில், கூவம் ஆற்றங்கரையில் குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.எனவே, மேற்கண்ட இடங்களில், குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டக் கூடாது. அதை மீறி குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டினால் அபராதம் விதிக்கப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை