காஸ் கசிவால் தீ விபத்து குடிசை வீடு எரிந்து சாம்பல்
ஊத்துக்கோட்டை: காஸ் கசிந்ததால், குடிசை வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்த நாசமாகின. வெங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் நீலா, 57. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு நீலா துாங்கி கொண்டிருந்தார். அப்போது, காஸ் கசிவால் குடிசை வீடு தீப்பற்றியது. கண்விழித்த நீலா, உடனே வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். நீலா மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், குடிசை வீடு முழுதும் எரிந்து சாம்பலாகின. மேலும், வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமாகின.