உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேன்சி ஸ்டோரில் தீ விபத்து சீத்தஞ்சேரியில் பரபரப்பு

பேன்சி ஸ்டோரில் தீ விபத்து சீத்தஞ்சேரியில் பரபரப்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த சீத்தஞ்சேரி கிராமத்தில் வசிப்பவர் பாலாஜி, 55; அரசு பேருந்து நடத்துநர். இவர், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இவரது மனைவி வழக்கம்போல், கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 7:00 மணிக்கு திடீரென கடையில் இருந்து புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதிவாசிகள், பாலாஜிக்கு தகவல் கொடுத்தனர்.அவர் கடையை திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த பொருட்கள் எரிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.இதில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின்படி, பென்னலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை