உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடி தாக்கியதில் புளிய மரத்தில் தீ

இடி தாக்கியதில் புளிய மரத்தில் தீ

திருத்தணி, திருத்தணி அருகே, புளியமரத்தின் மீது இடி விழுந்ததில் தீப்பிடித்து எரிந்ததை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள கோவில் தெருவில், 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஒரு புளியமரம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை, 4:00 மணி வரை, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் புளிய மரத்தின் மீது இடி விழுந்ததில் மரம் தீப்பிடித்து எரிய துவங்கியது. அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து வீரர்கள் வந்து, ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி புளிய மரத்தில் தீயை அணைத்தனர். இடி தாக்கியதில் புளிய மரம் அருகே உள்ள வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. ★★


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை