ஆலையில் தீ விபத்து தொழிலாளர்கள் இருவர் காயம்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அருகே சித்துார் நத்தம் கிராமத்தில், இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது.பழைய இரும்பு பொருட்களை கொதிகலனில்போட்டு உருக்கி, இரும்பு வார்ப்புகள் உருவாக்குப்படுகிறது.இங்கு உத்தரபிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களை சேர்ந்த, 60பேர் பணிபுரிகின்றனர்.நேற்று காலை, கொதிகலனில் இரும்பு பொருட்களை போட்டு உருக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, திடீரென கொதிகலனின் இருந்து இரும்பு பொருட்கள் வெடித்து தீப்பிழம்பாக வெளியேறி தொழிலாளர்கள் மீது சிதறியது.இதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த, ராஜ்குமார் ராய், 29, சுதிர்குமார், 45, ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.