உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுகாதார துறையினருக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

சுகாதார துறையினருக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

திருமழிசை, பூந்தமல்லி வட்டார சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு, பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்து நேற்று விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.பூந்தமல்லி சுகாதார அலுவலர் ஜே.பிரபாகரன் முன்னிலையில், பூந்தமல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ஜோதி தலைமையில் தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பூந்தமல்லி அடுத்த, கரையான்சாவடி, திருமழிசை, நேமம் ஆகிய பகுதிகளில் உள்ள பொது சுகாதார அலுவலக வளாகத்தில், மருத்துவர்கள், அலுவலர்கள், செவிலியர் மாணவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு, தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாப்பது, பேரிடர் பணி மேற்கொள்வது குறித்து, தீ விபத்தின் போது பாதுகாப்பாக தீயணைப்பு எவ்வாறு மேற்கொள்வது என, செயல்முறை விளக்கம் அளித்தனர்.இந்த தீ தடுப்பு விழிப்புணர்வில் வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஈஸ்வரி, அலுவலக கண்காணிப்பாளர் ஆனிமேரி ஜோஸ்பின், முதுநிலை துப்புரவாளர் எட்வர்ட் ராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மக்களை தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை