உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி முருகன் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திருத்தணி முருகன் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திருத்தணி, திருத்தணி முருகன் மலைக்கோவிலில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி திருத்தணி தீயணைப்பு நிலையம் சார்பில் நேற்று நடந்தது. திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி பங்கேற்று ஒத்திகை பயிற்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள், மலைக்கோவிலில் பணியாற்றும் கோவில் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த துப்புரவாளர்கள் ஆகியோருக்கு, தீ விபத்து ஏற்படும் போது, எப்படி தீயை பாதுகாப்புடன் அணைப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செயல்முறை அளிக்கம் அளித்தனர். தொடர்ந்து கோவில் ஊழியர்கள் தீயை அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.★★


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை