மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
10-Oct-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், மக்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள 375 தீயணைப்பு நிலையங்களில், நேற்றும் இன்றும், 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற தலைப்பில், தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இரு தினங்களும், காலை 10:00 - 11:00 மணி, மதியம் 12:00 - 1:00, மாலை 4:00 - 5:00 மணி வரை என மூன்று அமர்வுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தீயணைப்பு துறை சார்பில், மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆர்வமுடன் பங்கேற்ற மக்களுக்கு, தீ பாதுகாப்பு நடைமுறைகளை பயிற்றுவித்தனர். மேலும், தீயை அணைக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டன. அதேபோல், கும்மிடிப்பூண்டி மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தீயணைப்பு நிலையங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
10-Oct-2025