அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை எம்.பி.,யிடம் பழவேற்காடு மீனவர்கள் புகார்
பழவேற்காடு, பழவேற்காடு, பசியவாரம் கிராமத்தில், குழந்தைநேய உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 32.80 லட்சம் ரூபாயில், அரசு நடுநிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவில் நேற்று, திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் பங்கேற்றார். அவருடன் பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் உடனிருந்தார்.திறப்பு விழாவை தொடர்ந்து, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் எம்.பி., ஆய்வு மேற்கொண் டார். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ள வர்களிடம் சிகிச்சைகள் குறித்தும், பணியாளர்கள், மருத்துவர், செவிலியர்கள்எண்ணிக்கை குறித்தும் அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். புறநோயாளிகள் பிரிவில் இருந்தவர்களிடம் பேசினார்.அப்போது அவர்கள் கூறியதாவது:மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை இருக்கிறது. நான்குபேரில் இரண்டு பேர் மாற்று இடங்களில் பணிபுரிகின்றனர். இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை.இங்கு வருபவர்கள் பொன்னேரி, சென்னை மருத்துவமனைகளுக்கு 'ரெபர்' செய்யப்படுகின்றனர். மருந்து, மாத்திரைகள் வெளியில் இருந்து வாங்கிவர அறிவுறுத்தப்படுகிறது. அவசர மருத்துவ உதவி களை பெற முடியாமல் தவிக்கிறோம். பழவேற்காடு பகுதியை சுற்றிலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால், இங்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.உரிய நடவடிக்கைஎடுப்பதாக மீனவர்களிடம்,எம்.பி., உறுதியளித்தார்.