மேலும் செய்திகள்
டூ- விலர்கள் மோதல் மூவர் படுகாயம்
12-Jun-2025
திருத்தணி: திருத்தணி அருகே, மூன்று கார்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் விஜய், 29, விக்னேஷ், 30. இவர்கள், பள்ளிப்பட்டு பகுதியிலுள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று மதியம் நகரி வழியாக பள்ளிப்பட்டுக்கு, ரெனால்ட் காரில் சென்றனர். காரை, விஜய் ஓட்டிச் சென்றார்.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பொன்பாடி சோதனைச்சாவடி அருகே சென்ற போது, நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த இன்னோவா கார், இவர்களது காரில் நேருக்கு நேர் மோதியது. சிறிது நேரத்தில், நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த மற்றொரு இன்னோவா கார், இந்த இரு கார்களின் மீதும் மோதியது.இந்த விபத்தில் விஜய், விக்னேஷ், இன்னோவா காரில் வந்த சென்னை, பெருங்களத்துாரைச் சேர்ந்த முகுந்தன், 61, அம்பத்துாரைச் சேர்ந்த வரதராஜ், 53, மற்றொரு இன்னோவா காரை ஓட்டி வந்த ஓட்டுநர் என, ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஐந்து பேரையும் அங்கிருந்தோர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Jun-2025