பூ பயிரிட்ட விவசாயிகள் மழையால் கடும் அவதி
திருத்தணி:திருத்தணி அடுத்த தாழவேடு, பட்டாபிராமபுரம், மேதினாபுரம், சீனிவாசபுரம், கோபாலபுரம், தும்பிக்குளம், முருக்கம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், மல்லி, முல்லை, கனகாம்பரம், சாமந்தி, ஜாதிமல்லி உள்ளிட்ட பூக்களை பயிரிட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் காலை 10:00 மணி வரை தொடர்ந்து துாறல் மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்தது. இதனால் விவசாயிகள், காலையில் பூக்களை பறிக்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர். சில விவசாயிகள் பூக்களை பறிக்காததால், செடியிலேயே அழுகியது.