உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பறக்கும் படை சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்

 பறக்கும் படை சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்

திருவாலங்காடு: ஆந்திராவிலிருந்து சரக்கு ஆட்டோவில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 1 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கனக்கம்மாச்சத்திரம் அடுத்த முத்துக்கொண்டாபுரம் பகுதியில், உஷா ராணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணிம், 32, என்பவர் உரிய ஆவணங்களின்றி சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்த 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ