உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பவானியம்மன் கோவிலில் ரூ.12 கோடியில் அடிக்கல்

பவானியம்மன் கோவிலில் ரூ.12 கோடியில் அடிக்கல்

ஊத்துக்கோட்டை:பவானியம்மன் கோவிலில், 12.03 கோடி மதிப்பில், புதிய கட்டுமான பணி காணொலி காட்சி வாயிலாக துவக்கப்பட்டது.பெரியபாளையம் பவானிம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர்.இங்கு பக்தர்கள் வசதிக்காக, 125 கோடி ரூபாய் மதிப்பிட்டில் மண்டபம், அன்னதான கூடம், பக்தர் ஓய்வறை, சுற்றுச்சுவர், தங்கும் விடுதி ஆகியவை கட்டும் பணி நடந்து வருகிறது.இக்கோவிலில் நேற்று, 10.43 கோடி ரூபாயில் ஏழு நிலை ராஜகோபுரம் ஒன்று, ஐந்து நிலை ராஜகோபுரம் மூன்று மற்றும் 1.60 கோடி ரூபாயில் மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உப சன்னிதிகள் கட்டும் பணிக்கான தொடக்க விழா நடந்தது.இதை, சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். கோவிலில் நடந்த விழாவில், அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அறங்காவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ