உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ரூ.46 கோடியில் கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல்

 ரூ.46 கோடியில் கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல்

திருவாலங்காடு:குப்பம் கண்டிகை, எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில் 46 கோடி ரூபாயில் உயர்மட்டப்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை, எல்.வி.புரம் கிராமங்களில் வசிக்கும் மக்கள், கொசஸ்தலையாற்றை கடந்து செல்ல, ஆற்றின் குறுக்கே 30 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, தரைப்பாலம் உடைந்தது. பின், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைத்தனர். அதன்பின், 2019, 2021, 2022 மற்றும் 2023, 2024ம் ஆண்டு என, தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்வதும், ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைப்பதும் தொடர்கதையானது. மேலும் மணவூர், பழையனூர் உட்பட 20 கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்படுவதும் வாடிக்கையானது. எனவே உயர்மட்டப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குப்பம்கண்டிகை மற்றும் எல்.வி.புரம் கிராமங்களில், கொசஸ்தலையாற்றின் குறுக்கே 46 கோடி ரூபாயில் நபார்டு திட்டத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் திருவள்ளூர் தொகுதி தி.முக., எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உயர்மட்டப்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இதில் திருவள்ளூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ