உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 3,200 போதை மாத்திரை பறிமுதல் சென்னை வாலிபர்கள் நால்வர் கைது

3,200 போதை மாத்திரை பறிமுதல் சென்னை வாலிபர்கள் நால்வர் கைது

மப்பேடு:அரக்கோணம் ரயில் நிலையத்தில் 3,200 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த மப்பேடு போலீசார், சென்னையைச் சேர்ந்த நான்கு வாலிபர்களை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. திருவள்ளூர் - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், புறநகர் மின்சார ரயிலில் போதை மாத்திரைகளை கொண்டு வருவதாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, மப்பேடு போலீசார் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, நால்வரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து, 1.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,200 'டைடால்' எனும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த துரைராஜ், 29, நடராஜன், 26, ஊரப்பாக்கம் விஜய் (எ) வண்டு, 22, திருவான்மியூர் ஏழுமலை, 29, ஆகியோர் என தெரிய வந்தது. வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், நால்வரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை