கொலை செய்ய சதி திட்டம் தப்பியோடிய நால்வர் கைது
திருமழிசை:திருமழிசை பகுதியைச் சேர்ந்த எபனேசர் என்பவர், 2024, செப்டம்பர் மாதம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மண்ணுார் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய ஏழு பேரில் நான்கு பேரை, பூந்தமல்லி உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில், வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தப்பியோடிய நான்கு பேரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுாரில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, திருமழிசை பிரையாம்பத்து ராமு, 22, உடையார் கோவில் வில்லியம்ஸ், 24, பழனி, 24, திவாகர், 27 ஆகிய நான்கு பேரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து கைது செய்தனர். வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் அயப்பன் மற்றும் போலீசார், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.