மேலும் செய்திகள்
மனைவியை அடித்து கொன்ற கொடூர கணவனுக்கு ஆயுள்'
13-Mar-2025
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 35. இவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர், 15,000 ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ராஜேஷ், வேலுவிடம் பணத்தை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வேலுவின் மகன் ஆகாஷ், 19, மற்றும் அவரது நண்பர்களான பிரசாந்த், 22, டில்லிபாபு, 19, மதன், 19, ஆகியோருடன் சென்று ராஜேஷை கட்டையால் தாக்கியுள்ளார். அப்போது, தடுக்க வந்த ராஜேஷின் மனைவி ருக்மணியையும் தாக்கினர். காயமடைந்த இருவரும் திருத்தணி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து ருக்மணி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் ஆகாஷ், பிரசாந்த், டில்லிபாபு, மதன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
13-Mar-2025