உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வழிப்பறி திருடர்கள் நான்கு பேர் கைது

வழிப்பறி திருடர்கள் நான்கு பேர் கைது

மீஞ்சூர்,:மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில், கடந்த 20ம் தேதி போலீஸ் எனக்கூறி வடமாநில லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த மூரத்தி, 38, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகங்களுக்கு பொருட்களை ஏற்றிவரும் வடமாநில லாரி டிரைவர்களிடம் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, மீஞ்சூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று மதியம் அத்திப்பட்டு புதுநகர் பாரத் பெட்ரோல் பங்க் அருகே தங்கியிருந்த வடமாநில லாரி டிரைவர்களிடம், நான்கு பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீசார், வழிப்பறி திருடர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த அருண், 25, தர்வேஷ், 23, ராகுல், 19, மற்றும் நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 25, என்பதும், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை