உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பேருந்தில் மகளிர் இலவச பயணம் அரசுக்கு மாதம் ரூ.7,000 கோடி செலவு அமைச்சர் நாசர் தகவல்

அரசு பேருந்தில் மகளிர் இலவச பயணம் அரசுக்கு மாதம் ரூ.7,000 கோடி செலவு அமைச்சர் நாசர் தகவல்

திருவள்ளூர்:''இலவச பயண திட்டத்தால், மாதந்தோறும் மகளிருக்கு 838 ரூபாய் மிச்சமாகும் நிலையில், அரசுக்கு மாதம் 7,000 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது,'' என, தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, ஒன்பது குளிர்சாதனம் மற்றும் ஒரு சாதாரண பேருந்து என, 10 புதிய பேருந்துகள் துவக்க விழா, கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், புதிய பேருந்துகளை துவக்கி வைத்து தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் நெல்லுார், திருப்பதி வழித்தடத்தில், புதிதாக ஒன்பது குளிர்சாதனம் மற்றும் ஒரு சாதாரண பேருந்து என, 10 பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம், 224 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், 72 நகரம் மற்றும் 152 புறநகர பேருந்துகள். தற்போது, 67 புதிய பேருந்து சேவைகளும், அதில், 15 இலவச விடியல் பயண பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இலவச விடியல் பயண திட்டத்தால், அனைத்து மகளிரும் தமிழகம் முழுதும் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இதனால், மாதத்திற்கு சராசரியாக 838 ரூபாய் பயண செலவு தினமும் மிச்சப்படுகிறது. ஆனால், அரசுக்கு தினமும் 57 லட்சம் ரூபாயும், மாதத்திற்கு 7,000 கோடி ரூபாயும் செலவினம் கூடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை