உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் கங்கை பூஜை

வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் கங்கை பூஜை

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோ வில் குளம் நிரம்பியதை அடுத்து, நேற்று கங்கை பூஜை நடந்தது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் குளம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பருவமழை காரணமாக, குளம் நிரம்பிய நிலையில், கோவிலின் ஐதீக முறைப்படி கங்கை பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை 9:00 மணிக்குபூஜை துவங்கியது. இதில், பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர், விபூதி கொண்டு சுவர்ண அபிஷேகம் செய்யப்பட்டது. பின், தாம்பூலத்தில் புடவை, வெற்றிலை, பாக்கு, பழம், பூ வைத்து குளத்தில் விடப்பட்டு பூஜை நிறைவு பெற்றது. இந்த பூஜையை காண்போருக்கு, கங்கைக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த பூஜையில், திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை