உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது

திருத்தணி:ஆந்திராவில் இருந்து, திருத்தணி வழியாக சென்னை, வேலுார் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று, திருத்தணி போலீசார் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடு செல்லும் அரசு பேருந்து தடம் எண்:201 என்ற பேருந்து பொன்பாடி சோதனைச்சாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.பேருந்தில் இருந்த ஒரு பயணியிடம், 8 கிலோ கஞ்சாவை இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருப்பத்துார் மாவட்டம், உத்துப்புளி தாலுகா சப்படா நாயகன் பாளையத்தைச் சேர்ந்த கருணாகரன் மகன் மோகன்ராஜ், 27, என, தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் மோகன்ராஜ்யை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி